முன்விரோதம் காரணமாக நடந்த சம்பவம்: ஊராட்சி துணைத் தலைவர் வெட்டிக்கொலை
விருதுநகர் அருகே ஊராட்சி துணைத் தலைவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வச்சக்காரப்பட்டி அருகே உள்ள தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் அனந்தராமன். இவருக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2006 முதல் 2016 வரை வச்சக்காரப்பட்டி ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்தவர். 2016ல் இந்த ஊராட்சி தனி ஊராட்சியானது. இதையடுத்து தற்போது ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும் ஒப்பந்த அடிப்படையில் டாஸ்மாக் லாரிகளையும் இயக்கி வந்தார். இந்நிலையில் தன்னிடம் பணியாற்றும் குருசாமி என்பவரது திருமணம் தடங்கம் கிராமத்தில் நடைபெற்ற நிலையில் அதற்காக அனந்தராமன் சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த 4 பேர் கொண்ட கும்பல், அனந்தராமனை சுற்றி வளைத்து வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இவர் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருடன் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக கொலை நடந்ததா ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story