எண்ணெய் குழாய் பதிப்பு திட்டம்- விவசாயிகள் எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
எண்ணெய் குழாய் பதிப்பு திட்டம்- விவசாயிகள் எதிர்ப்பு
x
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம், திருக்கண்டலம் முதல் தேர்வாய்கண்டி எண்ணெய் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. பொன்னேரி அடுத்த ஆரணி பாலவாக்கம் கிராமத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்க அதிகாரிகள் வந்திருந்தனர். அங்கு திரண்ட விவசாயிகள் விளை நிலங்களில் எண்ணெய் குழாய்களை பதிப்பதால் விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்படும் எனவும், குறிப்பிட்ட தோட்டக்கலை பயிர்களை பயிரிடவும் இந்த திட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதக குற்றம் சாட்டினர். எதிர் காலங்களில் தங்களுடைய நிலங்களில் வீடுகளை கூட முடியாத சூழல் ஏற்படும் எனவும் ஆதங்கம் தெரிவித்தனர். விளை நிலங்களை கையகப்படும் திட்டத்தை கைவிட்டு புறம்போக்கு நிலம் வழியாக குழாய் பதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்