"விரும்பிய நாளில் சிசேரியனில் குழந்தை" : தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விரும்பிய நாளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுப்பது இயற்கைக்கு முரணானது எனவும், அதனை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விரும்பிய நாளில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுப்பது இயற்கைக்கு முரணானது எனவும், அதனை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மக்கள் தொகை தின விழாவில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். மேலும், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் மகப்பேறு சிகிச்சை 60 சதவீதமாக இருப்பதாகவும், இதனை 80 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
Next Story