தமிழகத்தில் பரவலாக பெய்த மழை -வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் நல்ல மழை பெய்தது.
x
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. எழும்பூர், ராயப்பேட்டை, பாரிமுனை, சிந்தாரிப்பேட்டை, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உட்பட   பல்வேறு  பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்ததால் நகரில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம்  கலவை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், நெமிலி, அரக்கோணம் உள்பட பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடி, பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.   பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.வேலூரில் சத்துவாச்சாரி, காட்பாடி, அலமேலு மங்காபுரம், கொணவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.கும்பகோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான செட்டிமண்டபம், சாக்கோட்டை, அம்மாசத்திரம்,
உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரம்  மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்