"ஒன்றிய அரசு" என்று சொல்ல தடை இல்லை - உயர் நீதிமன்ற மதுரை கிளை

ஒன்றிய அரசு என தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் கூறுவதற்கு தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது
ஒன்றிய அரசு என்று சொல்ல தடை இல்லை -  உயர் நீதிமன்ற மதுரை கிளை
x


ஒன்றிய அரசு என தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் கூறுவதற்கு தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய அரசு, மத்திய அரசை "ஒன்றிய அரசு" என்று கூறிவருவது இறையாண்மைக்கு எதிரானது  என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்
ஒன்றியம் போன்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு பின்புலத்தில் ஏதோ தீவிரவாத சக்தியின் உந்துதல் இருப்பதாக சந்தேகம் எழுகிறது எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்
தமிழக அரசு "ஒன்றியம்"என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், இந்திய அரசை இந்தியா அல்லது பாரதம் என்றே குறிப்பிட உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது..
அப்போது முதலமைச்சரும், அமைச்சர்களும் சட்டமன்றத்தில் இது தான் பேச வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட முடியாது, என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 
அது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று கூறிய நீதிபதிகள், ஒன்றிய அரசு" என்று சொல்ல தடை இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்..


Next Story

மேலும் செய்திகள்