மேலும் வலுவானது சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - சேப்பாக் அணியில் சந்தீப் வாரியர்

தமிழ்நாடு பிரீமியர் லீக் வீர‌ர்கள் தேர்வில், ஐ.பி.எல் நட்சத்திர வீர‌ர் சந்தீப் வாரியர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நெல்லை, திருப்பூர், சேலம் என புதிதாக 3 அணிகள் உருவாகியுள்ளன.
x
தமிழ்நாடு பிரீமியர் லீக் வீர‌ர்கள் தேர்வில், ஐ.பி.எல் நட்சத்திர வீர‌ர் சந்தீப் வாரியர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நெல்லை, திருப்பூர், சேலம் என புதிதாக 3 அணிகள் உருவாகியுள்ளன.

தமிழக அரசு அதிகாரப்பூர்வ அனுமதி அளிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி 20 போட்டிகளை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. அரசின் நெறிமுறைகளை கடைபிடித்து போட்டிகளை நடத்த தயார் என சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறியுள்ளார். 

கேரள அணியில் இருந்து தமிழக அணிக்கு இடம் மாறியுள்ள வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியரை சேப்பாக் சூப்பர் அணி தேர்வு செய்துள்ளது. 

சந்தீப் வாரியர், நிலேஷ் சுப்பிரமணியம்,
 எஸ் ராதாகிருஷ்ண‌ன் ஆகியோரை தேர்வு செய்த‌தன் மூலம் அணி மேலும் வலுவாகியுள்ளது என சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி கூறியுள்ளார்

2019 ஆம் ஆண்டில் கோப்பையை வென்ற அணியை மீண்டும் கட்டமைப்போம் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமாங் பதானி தெரிவித்துள்ளார்.

சேலம் ஸ்பார்டன்ஸ், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் என புதிதாக 3  அணிகள் உருவாகியுள்ளன. 

திருநெல்வேலி மாவட்டத்திற்காக சொந்தமாக ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், உள்ளூர் போட்டிகளில் கவனம் ஈர்த்த வீர‌ர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியினர் தெரிவித்தனர். 

தங்களிடம் ஆல்ரவுண்டர்கள் நிறைய இருப்பதால், வெற்றி வாய்ப்புகளும் நிறைய உள்ளதாக சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் உரிமையாளர் தெரிவித்தார். 

லீக் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் உள்ளதால் தங்களிடம் சீரான அணி உருவாகியுள்ளதாக ஐடிரீம் திருப்பூர் தமிழன் அணியினர் தெரிவித்தனர். 

புதிதாக மூன்று அணிகளுடன் நடக்கவிருக்கும் டி.என்.பி.எல் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்... 


Next Story

மேலும் செய்திகள்