மின் கணக்கீடு செய்யும் பணிகள், இனி வழக்கம் போல் நடைபெறும் - தமிழக மின் வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் மின் கணக்கீடு செய்யும் பணிகள், இனி வழக்கம் போல் நடைபெறும் என தமிழக மின்வாரியம் அறிவித்து உள்ளது.
x
தமிழகத்தில் மின் கணக்கீடு செய்யும் பணிகள், இனி வழக்கம் போல் நடைபெறும் என தமிழக மின்வாரியம் அறிவித்து உள்ளது.தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரம் அடைந்ததால், வீடு வீடாக சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், மின் கட்டணம் செலுத்துவதற்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்த சலுகைகள் ஜூன் 15ம் தேதி வரை மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், மின் கணக்கீடு செய்யும் பணிகள், இனி வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கான கட்டணத்தை செலுத்தும் பழைய நடைமுறையே தொடரும் என்றும், தமிழக மின் வாரியம் அறிவித்து உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்