மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, நெல் மூட்டைகள் நனைந்து வீணானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.இந்த செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.இந்நிலையில், மழை நீரில் நெல் வீணாவதைத் தடுக்க சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும், இல்லாவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், காய வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட நெல் மழையில் நனைந்துள்ளதாகவும், இதுசம்பந்தமான முழு விவரங்களைப் பெற்று தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனக் கூறி, விசாரணையை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைத்தனர்.
Next Story