"தமிழகத்தில் 3,000 படுக்கைகள் காலியாக உள்ளன" - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

வேலூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் ஆக்சிஜன் படுக்கை கொண்ட வளாகங்களை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
x
வேலூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் ஆக்சிஜன் படுக்கை கொண்ட வளாகங்களை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர், ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள்  குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 3 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளதாக கூறினார். ஆக்சிஜன் கையிருப்பு 660 மெட்ரிக் டன்னாக இருப்பதாகவும் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்