"6ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசிகள் வர தொடங்கும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டாவது வாரமாக முழு ஊரடங்கு தொடரும் நிலையில், கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். காய்ச்சல் பிரிவு, புதிதாக திறக்கப்பட்ட 100 படுக்கைகள், மற்றும் கொரோனா சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை 20 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளதாக கூறினார்.
Next Story