இரண்டாவது நாளாக கனமழை... நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு

குமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்து வரும் கனமழையால், நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
x
இரண்டாவது நாளாக கனமழை... நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு 

குமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்து வரும் கனமழையால், நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.யாஸ் புயலின் தாக்கத்தால் குமரி மாவட்டத்தில் நேற்று முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்திருக்கிறது. பேச்சிப்பாறை அணை அதன் மொத்த கொள்ளளவை நெருங்கி வருவதால், அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சூறைக்காற்று மற்றும் கனமழையால் ஏராளமான மரங்கள் முறித்து விழுந்தன. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

Next Story

மேலும் செய்திகள்