"வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அனல்காற்று வீச வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ள வானிலை மையம். நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கடலோர மாவட்டங்களில் காற்றில் உள்ள ஒப்பு ஈரப்பதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை மையம், பிற்பகல் முதல் காலை வரை இயல்புக்கு அதிகமாக வியர்வை ஏற்படும் என தெரிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் நீர்சத்து மிகுந்த காய்கறி, பழ வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம்
எடப்பாடியில் மூன்று சென்டி மீட்டர் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்