சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து : விசாரிக்க 8 பேர் கொண்ட குழு அமைப்பு... தேசிய பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது.
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து : விசாரிக்க 8 பேர் கொண்ட குழு அமைப்பு... தேசிய பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை
x
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது.

சாத்தூர் பட்டாசு வெடி விபத்து தொடர்பாக ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. மேலும், விபத்து தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும்  பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் ஆகியோர் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு பஞ்சாப், ஹரியானாவின் முன்னாள் நீதிபதி கண்ணன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் உள்ளிட்ட 8 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்