"கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய பொருள்கள் அகற்றப்படவில்லை"- சிகிச்சை மைய வளாகத்திலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளதாக புகார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சித்த மருத்துவப் பிரிவில் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய கழிவு பொருட்கள் அகற்றாமல் வளாகத்திலேயே மலைபோல் குவித்து வைத்திருப்பதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், சித்த மருத்துவப் பிரிவில் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய கழிவு பொருட்கள் அகற்றாமல், வளாகத்திலேயே மலைபோல் குவித்து வைத்திருப்பதால், நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். பள்ளிபாளையத்தில் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில், 30 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய முகக் கவசங்கள், உணவு பொட்டலங்கள்,தினசரி அப்புறப்படுத்தாமல் மலைபோல் குவித்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை அகற்ற வேண்டும் என்று நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story