அனுதினமும் அதிகரிக்கும் கொரோனா - வயதானவர்களை அதிகம் தாக்கும் வைரஸ்

தமிழகத்தில் கொரோனா தொற்று, பாதிப்பினால் மருத்துவமனையை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அனுதினமும் அதிகரிக்கும் கொரோனா - வயதானவர்களை அதிகம் தாக்கும் வைரஸ்
x
ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இத்தகைய சூழலில், அனுதினமும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால், மருத்துவமனை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் முகக்கவசம் அணியாமல், சமூக விலகலை பின்பற்றாமல் அலட்சியத்துடன் இருப்பதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த மாதம், நவம்பர் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் வைரஸின் பாதிப்பு தீவிரத்தைக் காட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. மிகவும் சிக்கலான இந்த நிலைமைக்கு ஏற்ப மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடித்தால், தொற்று பாதிப்பில் இருந்து தமிழகத்தை தற்காத்து கொள்ள முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்