நடிகர் சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி - தயாரிப்பாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
நிலம் வாங்கி தருவதாகக் கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சூரி அடையாறு காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில்ஸ வீர தீர சூரன் என்ற படத்திற்கான 40 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தர மறுப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், நிலம் வாங்கி தருவதாகக் கூறி தன்னிடம் 2 கோடியே 70 லட்சம் பெற்றதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக விசாரித்த அடையாறு போலீசார், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான ரமேஷ் குடவாலா ஆகிய இருவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story