அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் - முந்தைய செமஸ்டரிலும் அரியர்ஸ் உள்ளதால் குழப்பம்

அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்த நிலையில், அதனை செயல்படுத்துவதில் பெரிய சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது,.
அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் - முந்தைய செமஸ்டரிலும்  அரியர்ஸ்  உள்ளதால் குழப்பம்
x
அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி அடையச்செய்யப்படுவார்கள் என்ற  தமிழக அரசின்  அறிவிப்பு காரணமாக ஏழு லட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள் என்று  தகவல் வெளியானது.  இந்த நிலையில் அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல மாணவர்கள்  முந்தைய செமஸ்டர்களில்  பெற்ற  External மற்றும் Internal மதிப்பெண்கள் தேர்ச்சி வழங்கக்கூடிய அளவில் இல்லாததால்,   அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு   தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்குவதில் குழப்பம் எழுந்துள்ளது. முந்தைய தேர்வுகளிலும் ஏராளமான மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பதால், எப்படி மதிப்பெண்களை வழங்குவது என தெரியாம்மல், பல்கலைக்கழங்கள் தவித்து வருகின்றன.மாணவர்களுக்கு முந்தைய செமஸ்டர் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ யின் வழிகாட்டுதல் ஆகும்.  இதனால் அரியர் மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்கிற குழப்பம் பல்கலைக்கழங்கள் கல்லூரிகள் மத்தியில் எழுந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்