பிரதமர் அலுவலக இணை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ். நியமனம் - 5 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார் என அறிவிப்பு
தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1994 ல் தமிழக ஐஏஎஸ் அதிகாரியாக பணிக்கு சேர்ந்த அமுதா, மதுரையைச் சேர்ந்தவர். சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் பணியாற்றியிருக்கிறார். மாவட்ட ஆட்சியர், சிறப்பு அதிகாரி, சென்னையில் வெள்ள மீட்பு பணிகள் என துரிதமாக செயல்பட்டவர்.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரது இறுதி ஊர்வலங்களை சுமூகமாக நடத்தி முடித்து அனைவரது பாராட்டையும் பெற்றவர். இவர் தற்போது, உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றிவரும் நிலையில், பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 5 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார் என மத்திய அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story