கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் - விலை அதிகமான மருந்தை வரவைத்த சென்னை காவல் ஆணையர்
காவல் ஆய்வாளருக்கு உரிய நேரத்தில், அரிய மருந்தை ஏற்பாடு செய்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே விசுவநாதனின் செயல், காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை சுமார் 600 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 250 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பி வருகின்றனர். 300 க்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தி. நகரை சேர்ந்த ஆய்வாளர் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஆக்டெம்ரா என்கிற மருந்தை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விலை அதிகமுள்ள அந்த மருந்துக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், தகவலறிந்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், காவல்துறை உயர் அதிகாரிகளை முடுக்கிவிட்டு மருந்தை கொண்டுவந்துள்ளார். அந்த மருந்துக்கு செலவான சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை, காவல் ஆணையர், கூடுதல் ஆணையர், இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆகியோர் சேர்ந்து ஏற்றுக் கொண்டுள்ளனர். மருந்து அளிக்கப்பட்டபின் காவல் ஆய்வாளர் உடல்நலம் தேறி வரும் நிலையில், உயர் அதிகாரிகளின் செயலால் சென்னை காவலர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story