காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை - ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம்

தர்மபுரி மாவட்டம் அரூரில் விஷம் அருந்தி தற்கொலை செய்த காதல் ஜோடியை ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை - ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம்
x
அரூரை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரும், அவரது உறவுக்கார பெண்ணான சோபியா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஆனந்த ராஜுக்கு வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யவே, காதல் விவகாரத்தை தமது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்களும் ஊரடங்கு முடிந்த பின் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தங்களுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் என நினைத்த இருவரும், வனப்பகுதியில் திருமணம் செய்து கொண்டு, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு பின், ஒரே சவப்பெட்டியில் வைத்து உறவினர்கள் அடக்கம் செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்