திருமணம் செய்வதாக கூறி 6 சவரன் நகை மோசடி - சிசிடிவி காட்சி மூலம் மர்ம நபரை தேடும் போலீஸ்

இணையதளம் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணின் 6 சவரன் நகைகளை பறித்து மாயமான ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமணம் செய்வதாக கூறி 6 சவரன் நகை மோசடி - சிசிடிவி காட்சி மூலம் மர்ம நபரை தேடும் போலீஸ்
x
சென்னை தேனாம்பேட்டை எஸ்.எஸ் புரத்தை சேர்ந்த இள்ம் பெண் ஒருவர் இணையதள திருமண தகவல் மையத்தில் மணமகன் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து சூர்ய பிரகாஷ் என்பவர்  அறிமுகமாகி அப்பெண்ணிடம் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். தான் வசதியான வீட்டு பிள்ளை என்றும் எனவே ரகசிய திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் அபபெண்ணிடம் ஆசை வார்ததை கூறி அவரை அழைத்துள்ளார். இதனை நம்பி அந்த இளம் பெண் அவருடன் சென்றுள்ளார். இந்நிலையில், திருமணத்திற்காக பேஷியல் செய்ய வேண்டும் என்று அழகு நிலையத்திற்கு கூட்டி சென்ற சூர்ய குமார், அவர் அணிந்திருந்த 6 சவரன் நகைகளை நயமாக பேசி வாங்கிவிட்டு மாயமாகியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட அப்பெண் பாண்டிபஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்துளளார். இதுதொர்பாக சிசிடிவி பதிவுக்ள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்