ஊரடங்கால் முடங்கிய மக்கள் நடமாட்டம் - ஆனந்த குளியலிட்டு மகிழும் அழகிய பறவைகள்

ஊரடங்கு உத்தரவால் மனிதர்களின் நடமாட்டம் குறைந்து பூமியில் இயற்கை தன்னை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்ப்போம்.
ஊரடங்கால் முடங்கிய மக்கள் நடமாட்டம் - ஆனந்த குளியலிட்டு மகிழும் அழகிய பறவைகள்
x
* கொரோனா வைராஸ் பரவுவதை தடுக்க உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. இதனால் மக்கள் வீடுகளுக்குள் 
முடங்கியதால் பல நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 
தொழிற்சாலைகள் இயங்காததால், வாகனபோக்குவரத்து குறைந்ததால்  
காற்றில் மாசு கலப்பது குறைந்து சுற்றுச்சூழலே புதுப்பொலிவுடன் காட்சி
அளிக்கிறது.

* இதேபோல் தமிழகத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் மக்கள் 
நடமாட்டமின்றி புதுபொலிவுடன் காட்சி அளிக்கின்றன. 
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள  மேற்கு தொடர்ச்சி 
மலைப்பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் 
மனிதர்களின் இடையூறின்றி இயற்கையோடு கை கோர்த்து 
மகிழ்ச்சியாக உலா வருகின்றன. 

* ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டாலும்,  உடுமலை மூணாறு சாலையில்
வாகனங்களின் ஹாரன் ஒலிகளுக்கு பயந்து ஒரமாய் நிற்கும் மான்கள் கூட்டத்தை இப்போது பார்க்க முடிவதில்லை. சாலையை கடக்க முடியாமல் நிற்கும் காட்டெருமைகள்...

* கொரோனா வைரசை தடுக்க உலகம் முழுவதும்  பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இயற்கை தன்னை புதுப்பித்து பொலிவுடன் காட்சியளிக்கிறது. விலங்குகளும், பறவைகளும் இயற்கையோடு இணைந்து மகிழ்ச்சியாக உள்ளன. 




Next Story

மேலும் செய்திகள்