தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம்

பொன்னேரி அருகே 144 தடை உத்தரவை மீறி வெளிமாநில தொழிலாளர்களை வைத்து இயங்கிய தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம்
x
பொன்னேரி அருகே 144 தடை உத்தரவை மீறி வெளிமாநில தொழிலாளர்களை வைத்து இயங்கிய  தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தச்சூரில் பாலிதீன் பை தயாரிக்கும் தொழிற்சாலை ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. உள்ளூர் தொழிலாளர்கள் பணிக்கு வராததால், வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து பணி நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்