உதவிப் பொருட்கள் நேரடியாக வழங்க தடையா? - அரசின் தடையை எதிர்த்து தி.மு.க வழக்கு
உணவுப் பொருட்களை நேரடியாக வழங்க தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து தி.மு.க சார்பில் தொடரப்பட்ட அவசர வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
உணவுப் பொருட்களை நேரடியாக வழங்க தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து தி.மு.க சார்பில் தொடரப்பட்ட அவசர வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான தி.மு.க. வழக்கறிஞர் வில்சன், மக்கள் கூட்டம் சேராமல், சமூக விலகலுடன் உணவு பொருள் வழங்கப்படுவதாகவும், அனைத்து தரப்பு மக்களையும் அரசு அணுக முடியாது என்றும் வாதம் செய்தார். குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், இது குறித்து பதிலளிக்க அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதிகள், ஒரு நாள் அவகாசம் வழங்கினர். இந்த விவகாரத்தில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
Next Story