கொரோனா வார்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - பரிசோதனை முடிவுகள் வராத நிலையில் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் 4வது ஆக ஒருவர் உயிரிழந்தார்.
66 வயதான மீனவரான இவர் கேரளாவில் மீன் பிடி தொழில் செய்து வந்தவர். கேரளாவில் இருந்து திரும்பிய இவருக்கு காய்ச்சல் இருந்ததால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் இன்று உயிரிழந்தார். இவருடைய மகன் கடந்த 13ஆம் தேதி, செளதி அரேபியாவில் இருந்து ஊர் திரும்பி இருந்த நிலையில், அவர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளார். இவரது கொரோனா பரிசோதனை முடிவு இன்னும் வெளிவராத நிலையில், உயிரிழந்துள்ளார். இந்நிலையில், குமரி மருத்துவமனையின், கொரோனா வார்டில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, ஏற்கனவே இங்கு உயிரிழந்த 3 நபர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story