சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்
சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியம் 600 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர். மருத்துவமனை முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. நிலுவை சம்பளம் வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று பணியாளர்கள் அறிவித்ததால் மருத்துவமனையில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Next Story