கற்பித்தலில் அசத்தும் அரசு பள்ளி - செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கல்வி கற்கும் மாணவிகள்

ஒசூர் அருகேயுள்ள அரசு பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.
கற்பித்தலில் அசத்தும் அரசு பள்ளி - செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கல்வி கற்கும் மாணவிகள்
x
ஒசூர் அருகேயுள்ள அரசு பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. கொல்லப்பள்ளி கிராமத்தில் செயல்படும் அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், ஓசூரிலுள்ள தனியார் பள்ளி நிர்வாகம் 4 லட்சம் ரூபாய் செலவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வசதியை செய்து கொடுத்துள்ளது. அதனைக் கொண்டு  4 D வீடியோ காட்சிகள் மூலம் மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம் பாடங்களை எளிதாக கற்றுக்கொள்ள முடிவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்