நண்பனை கொலை செய்த இளைஞர் - தலையுடன் காவல் நிலையத்தில் ஆஜர்
மதுரை அலங்காநல்லூரில் நண்பனை கொலை செய்த இளைஞர், அந்த தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அலங்காநல்லூரில் நண்பனை கொலை செய்த இளைஞர், அந்த தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலங்காநல்லூர் சுகாதார வளாகம் அருகே முனியாண்டி கோயில் பகுதியைச் சேர்ந்த ரவுடி முத்துவேல். அவர் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். அப்போது, ஏற்பட்ட தகராறில் தப்பாட்டக் கலைஞர் நாகராஜ், சக நண்பர்கள் உதவியுடன் அரிவாளால் முத்து வேலை வெட்டிக் கொலை செய்துள்ளார். துண்டான தலையுடன் காவல் நிலையத்தில், நாகராஜ் சரண்டரானதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நாகராஜ் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட முத்துவேல் மீது மதுரை, சிவகங்கை உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 20க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Next Story