பேருந்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் : தலைமறைவாக இருந்தவர் 2 ஆண்டுகளுக்கு பின் கைது
பேருந்தில் ஓட்டுநர் நடத்துனரால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவானவர் 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருந்தில் ஓட்டுநர் நடத்துனரால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவானவர் 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். ஓமலூர் அருகே நாரனம்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஓட்டுநர் மற்றும் நடத்துனரால் பேருந்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இதில் பேருந்து ஓட்டுநர்கள் மணிவண்ணன், பெருமாள், விஜய் மற்றும் நடத்துனர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த நடத்துனர் முருகன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Next Story