இறுதி சடங்கில் அதிமுக நிர்வாகிகள் மீது தாக்குதல் - உட்கட்சி பிரச்சினை காரணமாக தாக்குதல் என தகவல்
கன்னியாகுமரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜகுமார் மற்றும் அதிமுக முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ராஜசேகர் ஆகியோர் மறைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத்தின் இறுதி நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜகுமார் மற்றும் அதிமுக முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ராஜசேகர் ஆகியோர், மறைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத்தின் இறுதி நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அங்கு 8 பேர் கொண்ட கும்பல் இருவரையும், தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக நடைபெற்ற, உட்கட்சி பிரச்சனையால், இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளதாக, இருவரும் புகார் தெரிவித்துள்ளனர்.
Next Story