பாலியல் தொல்லை கொடுத்த உதவிப் பேராசிரியர் : குற்றத்தை உறுதி செய்த பல்கலைக்கழக விசாரணை குழு
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் உதவி பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவி ஒருவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், உதவிப் பேராசிரியரான வினோத் வின்சென்ட் ராஜேஷ், பாலியல் தொல்லை தருவதாக மாணவிகள் பலர் புகாரளித்தது குறித்தும், குற்றச்சாட்டை உறுதி செய்த பல்கலைக்கழகம் பணியிடை நீக்கம் செய்யவும், இரு ஊதிய உயர்வை நிறுத்தி வைக்கவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜி.ஆர்.சுவாமிநாதன், பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டப்படி, குற்றத்தை உறுதி செய்த நிலையில், அந்தப் புகாரை போலீஸாருக்கு அனுப்பவும், 3 வாரத்தில் வழக்கு பதிவு செய்து 3 மாதத்தில் விசாரணை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
Next Story