பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற மருத்துவ பணியாளர் - பணி நீக்கம் செய்து மதுரை அரசு மருத்துவமனை டீன் உத்தரவு
மதுரை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்ய முயன்ற ஒப்பந்த பணியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த கவுரி என்ற பெண், பச்சிளம் குழந்தையை விற்பனை செய்ய முயன்றதாக கடந்த 5 மாதங்களுக்கு முன், கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளி வந்த கவுரிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் பணி வழங்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய மருத்துவமனை டீன் சங்குமணி பணியாளர் கவுரியை, பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Next Story