இடிந்து விழும் அபாயத்தில் அங்கன்வாடி மையம் - புதிய கட்டடம் கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே இடிந்து விழும் அபாயத்தில் அங்கன்வாடி மையம் உள்ளதால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
இடிந்து விழும் அபாயத்தில் அங்கன்வாடி மையம் - புதிய கட்டடம் கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை
x
சத்தியமங்கலம் அருகே இடிந்து விழும் அபாயத்தில் அங்கன்வாடி மையம் உள்ளதால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் மலைப்பகுதியில் பங்களாதொட்டி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 15 குழந்தைகள் உள்ளனர். ஆனால் பழமை வாய்ந்த கட்டடம் என்பதால் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் நீர்க்கசிவும் ஏற்படுவதால் ஆபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே இந்த கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடம் ஒன்றை கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்