அன்புசெழியன் அலுவலகத்தில் 3 வது நாளாக சோதனை - ரூ.77 கோடி பறிமுதல் செய்த வருமானவரித்துறை
மதுரையில் அன்புசெழியன் வீட்டில் 3 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது
பிகில் பட வசூல் மற்றும் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக
அந்த படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரது வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய், கைபற்றப்பட்டதாக நேற்று வருமான வரித்துறையினர் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். நடிகர் விஜய் வீட்டில் சோதனை முடிந்த நிலையில், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் 3 வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் அன்பு செழியனுக்கு சொந்தமான 4 இடங்களிலும், சென்னையில் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் வீட்டிலும், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Next Story