வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நடைபெற்ற இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவையொட்டி யாகசாலை பூஜைகள்
நடைபெற்று வருகின்றன. தென்னக பண்பாட்டு மையம் மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பெரிய கோவில் நந்தி மண்டபம் முன்பு நடைபெற்ற இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
Next Story