ரேசன் கடை ஊழியர்கள் கூட்டத்தில் லஞ்சப்பணம் - ரூ. 28 ஆயிரம் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேசன் கடை ஊழியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கணக்கில் வராத பணம் கைமாறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேசன் கடை ஊழியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கணக்கில் வராத பணம் கைமாறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூட்ட அரங்கை மூடி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத 28 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது குறித்து அங்கிருந்தவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story