விதிமீறிய கட்டடத்துக்கு சீல் வைத்த விவகாரம் : வீடாகவோ, உணவகமாகவோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவு
கொடைக்கானல் பகுதியில் விதிமீறிய கட்டடத்தை உரிமையாளர்களே அகற்றிக்கொள்ள அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சீலிடப்பட்டதை அகற்றியவுடன் வீடாகவோ, உணவகமாகவோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது.
கொடைக்கானல் பகுதியில் விதிமீறிய கட்டடத்தை உரிமையாளர்களே அகற்றிக்கொள்ள அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சீலிடப்பட்டதை அகற்றியவுடன் வீடாகவோ, உணவகமாகவோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது. கொடைக்கானலில் விதிமீறிய உணவகம் மற்றும் விடுதிகளுக்கு அரசு சீல் வைத்தது. இந்நிலையில், புதிய மாஸ்டர் பிளான்படி, அவற்றை மாற்றியமைக்க ஏதுவாக, விதிமீறல் கட்டிடத்தை தாங்களே அகற்றிக் கொள்வதாக தனியார் உணவக உரிமையாளர் ஹென்றி என்பவர் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அடங்கிய அமர்வு, மனுதாரர் கூறியதை உள்ளூர் திட்டக் குழுமத்தினர் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
Next Story