"சூதாட்ட கிளப்பால் இளைஞர்கள் வாழ்க்கைக்கு பாதிப்பு" - அமைச்சர் சி.வி.சண்முகம்
புதுச்சேரியில் கொண்டு வரக்கூடிய சூதாட்ட கிளப்பால் தமிழக இளைஞர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி, தமிழகத்தில் மதுக்கடைகளை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்க வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் மொத்தமாக 6674 கடைகள் இருந்ததாகவும் தற்போது 5500 கடைகள் மட்டுமே இருப்பதாகவும், தமிழக அரசின் கொள்கையின்படி படிப்படியாக மதுவிலக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் மூலமாக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், மாநிலத்திற்கு ஒரு கொள்கையை காங்கிரஸ் வைத்திருப்பதாகவும், புதுச்சேரியில் மதுவிற்பனைக்கு தடை கோராதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். புதுச்சேரியில் வர உள்ள சூதாட்ட கிளப்பால் அந்த மாநில இளைஞர்கள் மட்டுமல்லாது தமிழக இளைஞர்களும் பாதிக்கப்படுவார்கள் என ஆவேசமாக பேசினார்.
Next Story