"இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்பது சாத்தியம்" - அமைச்சர் பாண்டியராஜன்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பது சாத்தியம் தான் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்பது சாத்தியம் -  அமைச்சர் பாண்டியராஜன்
x
இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பான விவாதத்தை திமுக தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசிடம் இருந்து 3 ஆயிரத்து 794 கோடி ரூபாய் வர வேண்டியிருக்கிறது என்றும், இந்தத் தொகையை கேட்டு பெறுவோம் என்றார். அப்போது, குறுக்கிட்டு பேசிய அமைச்சர் பாண்டியராஜன், இரட்டை குடியுரிமை என்பது சாத்தியமான ஒன்றுதான் என்றும், ஏற்கனவே ஒரு லட்சம் இந்தியர்கள் இரட்டை குடியுரிமை பெற்று இருக்கிறார்கள் என்றார். பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளுடன் இரட்டை குடியுரிமை தொடர்பாக  ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது என்றும் சுட்டிக் காட்டி, அதுபோல் இலங்கை நாட்டுடன் ஒப்பந்தம் போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், இலங்கை தமிழ் அகதிகளுக்கும்  இரட்டை குடியுரிமை என்பது சாத்தியமே என்றார். 


Next Story

மேலும் செய்திகள்