"நிலுவையில் உள்ள என்.ஆர்.சி. வழக்குகளை அவையில் விவாதிப்பது வழக்கிற்கு இடையூறாக இருக்கும்" - முதலமைச்சர் பழனிசாமி

என்.ஆர்.சி. குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து அவையில் விவாதிப்பது வழக்கிற்கு இடையூறாக இருக்கும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நிலுவையில் உள்ள என்.ஆர்.சி. வழக்குகளை அவையில் விவாதிப்பது வழக்கிற்கு இடையூறாக இருக்கும் - முதலமைச்சர் பழனிசாமி
x
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமிக்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், என்.ஆர்.சி அமல்படுத்தினால் அசாம் மாநிலத்தின் நிலை அனைத்து மாநிலங்களுக்கும் வந்துவிடுமோ என அனைத்து மாநிலங்களும் அஞ்சுவதாக கூறினார். இதனால் தான் என்.ஆர்.சி குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சரவையில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என பிரதமர் மோடி தெளிவாக கூறியிருப்பதை அமைச்சர் சி.வி.சண்முகம் சுட்டிக்காட்டி பேசினார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, என்.ஆர்.சி. குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து அவையில் விவாதிப்பது வழக்கிற்கு இடையூறாக இருக்கும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்