"1000 போக்சோ வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது" - காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி தகவல்
மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, போக்சோ புகார்கள், அதிகளவில் வருவதாக காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, போக்சோ புகார்கள், அதிகளவில் வருவதாக காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில், சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த 6 மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 25 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை, போக்சோ சட்டப்பிரிவின் கீழ், ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Next Story