அமைச்சரின் முயற்சியால் கடைமடை வந்த தண்ணீர் : பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்

சிவகங்கை மாவட்டம், நகர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்ப, முல்லை பெரியாறு நீடிப்பு கால்வாயின் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
அமைச்சரின் முயற்சியால் கடைமடை வந்த தண்ணீர் : பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்
x
சிவகங்கை மாவட்டம், நகர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்ப, முல்லை பெரியாறு நீடிப்பு கால்வாயின் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக திறக்கப்படும் தண்ணீரானது கடைமடை பகுதியான சிவகங்கை மாவட்டத்திற்கு வழங்க படாத சூழல் நீடித்து வந்தது. இந்நிலையில், தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் தண்ணீர் திறக்கப்பட்டு சிவகங்கை நகர் பகுதியை வந்தடைந்தது. இதனை பார்வையிட்ட அமைச்சர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் மலர்கள் தூவி வரவேற்றனர். கால்வாயில் நீண்ட நாட்களுக்கு பின்னர் தண்ணீர் வருவதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்