"மாதம்தோறும் குறைந்தது 20 பள்ளிகளில் ஆய்வு செய்யவும்" - தொடக்கக்கல்வி இயக்குனர் அதிரடி உத்தரவு

வட்டார கல்வி அலுவலர்கள் மாதம்தோறும் குறைந்தது 20 பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தொடக்க கல்வித்துறை இயக்குனர் பழனிச்சாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாதம்தோறும் குறைந்தது  20 பள்ளிகளில் ஆய்வு செய்யவும் - தொடக்கக்கல்வி இயக்குனர் அதிரடி உத்தரவு
x
வட்டார கல்வி அலுவலர்கள் மாதம்தோறும் குறைந்தது 20 பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென, தொடக்க கல்வித்துறை இயக்குனர் பழனிச்சாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அவர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பள்ளியில் குறைந்தபட்சம் 2 மணிநேரம் செலவிட்டு ஆய்வு மேற்கொள்ளவும், மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அரசின் நலத்திட்ட உதவிகள் மாணவர்களை சென்றடைந்துள்ளதா என்பதை உறுதிபடுத்தவும், அவர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்