வேலூர் கோட்டையின் அவலநிலை - ஆபாச விடுதியாக மாற்றும் காதலர்கள்
காதல் ஜோடிகளால், வேலூர் கோட்டை ஆபாச களமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா பயணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கம்பீர தோற்றத்துடன் கலைநயம் மிக்கதாக திகழும் வேலூர் கோட்டைக்குள் பெரிய ராஜகோபுரங்களுடன் ஜலகண்டேஸ்வரர் கோயில், திப்பு மகால், ஹைதர் மகால் என தொடங்கி புனித ஜான் தேவாலயம், மசூதி அமைந்திருப்பதால் மத வேறுபாடு இன்றி மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
கோட்டையை தொல்லியல் துறையினர் சரியாக பராமரிக்காததால் மதில் சுவரின் உட்புறத்தில் மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இந்த நிலையில் காதலர்கள் போர்வையில் வரும் சிலருக்கு புதர்களும் மதில் சுவரின் இடைவெளியும் வசதியான இடங்களாக மாறி வருகின்றனர். அவர்களின் சில்மிஷங்களால் சிறிய குழந்தைகளுடன் கோட்டையை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது.
இதேபோல அங்குள்ள பெரியார் பூங்காவிலும் இதே அவல நிலை தான் என ஆதங்கத்தை வெளிப்படுத்தும் மக்கள் இதனை போலீசார் கண்டு கொள்வதில்லை என்ற குற்றசாட்டையும் முன் வைக்கின்றனர்.
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி குழந்தைகளுக்கு வேலூர் கோட்டையை காண்பிக்க வந்தோம். வந்த இடத்தில் இந்த ஆபாச செயல்களை குழந்தைகள் பார்த்து விடாமல் மறைக்கவே படாத பாடு பட வேண்டியதாகி விட்டதாக பல பெற்றோர் குமுறிக்கொண்டே சென்றனர்.
Next Story