"பாஜகவில் சேர்ந்ததாக வந்த தகவல் உண்மையில்லை"- சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தகவல்
பாஜகவில் சேர்ந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.ஜெய்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் சேர்ந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.ஜெய்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் ஜூலை 6ஆம் தேதி நடந்த பாஜக கூட்டத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்தது சட்டம் சார்ந்த சில முக்கிய பிரச்னைகள் குறித்து பேசவே என்று தெரிவித்துள்ளார். தனிப்பட்ட சந்திப்புக்காக ஏற்பாடு செய்யாததால் மேடையில் காத்திருந்ததாகவும், உறுப்பினராக சேர்த்து விட்டதாக கூறி அடையாள அட்டை கொடுத்தவுடன் அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பாஜகவில் சேரும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story