"சூரிய கிரகணம் ஒரு நிழல் விளையாட்டு மட்டுமே" - அறிவியல் ஆய்வாளர்கள் கருத்து

வரும் 26 ஆம் தேதி, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் சூரியகிரகணம் நெருப்பு வளையம் போல் காட்சி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரிய கிரகணம் ஒரு நிழல் விளையாட்டு மட்டுமே - அறிவியல் ஆய்வாளர்கள் கருத்து
x
சூரிய ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல், மற்றொரு வான்பொருளில் விழுவதைத்தான் கிரகணம் என்கிறோம். சூரியனை நிலவு மறைத்து, அதன் நிழல், பூமியில் விழும்போது அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் வருகிற 26 ஆம் தேதி காலை சுமார் 8 மணி 5 நிமிடத்துக்கு தொடங்கும் சூரிய கிரகணம் 11:16 வரை  அதாவது 3 மணி நேரம் நீடிக்கிறது  அப்போது , கோவை, ஊட்டி, கரூர், திருச்சி, திண்டுக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை  போன்ற பகுதிகளில் நெருப்பு வளையம் போல சூரியன் காட்சி தரும். இதனை பார்க்க மாநிலம் முழுக்க பல்வேறு சிறப்பு  நிகழ்ச்சிகளை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்துவருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்