உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை திரும்பப் பெற்றது ஆணையம்
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது
டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. தேர்தல் மறுவரை வழக்கில் புதிய மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் அட்டவணை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து 9 புதிய மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களுக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்ற புதிய தேர்தல் அட்டவணைக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Next Story