தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் - தென்னிந்திய தேயிலை வாரியம் அதிரடி
தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த 18 தொழிற் சாலைகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த 18 தொழிற் சாலைகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. தரமற்ற தேயிலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளால், தென்னிந்திய தேயிலைக்கு விலை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலர்கள் நடத்திய ஆய்வில் 2 தொழிற் சாலைகள் தேயிலையில் கலப்படம் செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவற்றின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து 18 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு முதற் கட்டமாக நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது .
Next Story