ஆற்காட்டில் தலைமை ஆசிரியரை கண்டித்து போராட்டம் - பள்ளிக்கு மக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு
வேலூர் மாவட்டம் ஆற்காடு மாசாப்பேட்டை அண்ணா நகரில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு மாசாப்பேட்டை அண்ணா நகரில், நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான கீதா, பள்ளி கழிவறைகளை மாணவர்களை சுத்தம் செய்ய வைப்பதாகவும், சுகாதாரமான குடிநீர் மற்றும் சத்துணவை மாணவர்களுக்கு சரியாக வழங்காமல் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டி இருந்தனர். இவர் குறித்து மாவட்ட ஆட்சியர், கல்வி அதிகாரிக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை பள்ளியை இழுத்து மூடி பூட்டு, பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உரிய தீர்வு காண்பதாக தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story