பள்ளிக்கல்வித்துறைக்கு 7 வது ஐஏஎஸ் அதிகாரி நியமனம்
பள்ளிக்கல்வித்துறையில் ஏற்கனவே ஆறு அதிகாரிகள் உள்ள நிலையில், ஏழாவது ஐஏஎஸ் அதிகாரியாக சிஜி தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐஏஎஸ் அதிகாரிகள் அல்லாத அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பள்ளி கல்வித்துறை இருந்தது. ஆனால் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஒரு அதிகாரி, பாடநூல் கழகத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மற்றும் துறையின் முதன்மை செயலாளர் மற்றும் இணை செயலாளர் என 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறையில் புதிதாக ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அந்த பணியிடத்தில் சிஜி தாமஸ் என்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிய கல்விக் கொள்கையில், "இந்தியன் எஜுகேஷனல் சர்வீஸ்" என்ற பதவி ஏற்படுத்தப்பட்டு, அந்த அதிகாரியின் கீழ் ஒட்டுமொத்த கல்வித்துறையும் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தயாராக இருக்கக் கூடிய நிலையில், அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழக அரசு முன்கூட்டியே இப்படி ஒரு பதவியை ஏற்படுத்தி இருக்கலாம் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் அரசு பள்ளிகளை வலுப்படுத்த, ஆரோக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Next Story